Tamilnadu
குளிக்கச் சென்ற நண்பர்கள் : 10 ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த துயரம்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் தமிழ்ச்செல்வன். சிறுவன் அருகே உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் இன்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்த வேப்பமரத்து சாலை பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளான்.
அப்போது தமிழ்ச்செல்வன் நீரில் மூழ்கியுள்ளார். இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் உடனே போலிஸாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தமிழ்செல்வனை சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பருடன் குளிக்கச் சென்ற 10 ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வாக்களித்த மக்களுக்கு கைக்கொடுக்க இவ்வளவு தயக்கம் ஏன்? - முதலமைச்சரின் சர்ச்சை செயலுக்கு எழும் கண்டனம்!
-
அதிரடியாக ஜாகீர் கானை இறக்கிய சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் மைண்ட்.. இதுதான் ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
-
உயிரைக் காக்கும் மருந்தா? விளம்பரத்திற்கு பயன்படும் மோதிரமா? : த.வெ.க.வை நோக்கி எழும் கேள்விகள்!
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 : தங்கத்தை தட்டித் தூக்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
-
“எங்கப்பா காமராஜர் படம்?” : வெளிச்சத்திற்கு வந்த த.வெ.க அரசின் பித்தலாட்டம்!