Tamilnadu
இதை மாற்ற பா.ஜ.க அரசு தயாராக இருக்கிறதா? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பி இருக்கும் கேள்வி!
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"திராவிட மாடல் அரசு கொண்டு வரும் ஒவ்வொறு திட்டத்தையும் மக்கள் பாராட்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.இல்லாத கற்பனை கதைகளுக்கு வடிவம் கொடுப்பதையும், ஈரை பேனாக்கும் வேலையை செய்பவர்களுக்குதான் நமது அரசைப் பாராட்ட மனமில்லை.
பொய் செய்திகளை உருவாக்கி அதில் குளிர்காய நினைக்கும் மக்கள் விரோத சக்திகளின் அஜெண்டா ஒரு காலத்திலும் பலிக்காது.தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்க எதுவும் தடையாக இருக்கக்கூடாது. அது பசியாக இருந்தாலும், நீட் தேர்வாக இருந்தாலும், புதிய கல்விக் கொள்கையாக இருந்தாலும் சரி எந்த தடைவந்தாலும் அதை உடைப்பதுதான் எங்களின் முதல் பணி.
நெருக்கடி நிலை பற்றி நாடாளுமன்றத்தில் இப்போது கேள்வி எழுப்பும் பாஜக அரசு, அந்த நேரத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற தயாராக இருக்கிறதா?” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!