Tamilnadu
விக்கிரவாண்டியில் மாபெரும் வெற்றி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்னியூர் சிவா!
விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, உடல்நலக்குறைவால் கடந்த ஏப். 6 ஆம் தேதி காலமானார்.இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவித்தது.
பின்னர் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
எடப்பாடி பழனிசாமியின் தொடர் தோல்வி பயத்தால் இந்த இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்க, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி என்பவர் வேட்பாளராக போட்டியிட்டார். இதனைத் தொடர்ந்து ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
பின்னர் நேற்று வாக்குஎண்ணிக்கை நடைபெற்ற நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 25 ஆயிரத்து 712 வாக்குகள் பெற்று வரலாற்று வெற்றியை பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணி 56,589 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். அதேபோல் நாம் தமிழர் வேட்பாளர் டெபாசிட் இழந்துள்ளார்.
இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்னியூர் சிவா இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பணி குழுவாக செயல்பட்ட அமைச்சர்கள் கே என் நேரு, பொன்முடி, எ.வ.வேலு, எம் ஆர் கே பன்னீர்செல்வம், சக்கரபாணி, தாமோ அன்பரசன், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனர்.
Also Read
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!
-
பீரோவைத் திறந்தபோது... துணிகளுக்கு இடையே 3 அடி நாகப்பாம்பு!