Tamilnadu
புதிய குற்றவியல் சட்டங்கள் - ”முதன்முதலாக தமிழ்நாடு போராடுவது மகிழ்ச்சி” : இந்து என்.ராம் பேச்சு!
ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க சட்டத்துறை சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தி.மு.க பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தொடக்கிவைத்தார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம்,”மூன்று புதிய குற்றவியல் சட்டங்களால் பல விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சட்டங்கள் மூலம் நாங்கள் பழைய வழியில் செல்லபோகிறோம் என்பதை காட்டபார்க்கிறார்கள்.
ஆனால் காலம் மாறிவிட்டது. என்பதை அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. கூட்டணி கட்சிகளை வைத்துதான் இன்று பா.ஜ.க தனது அரசை நடத்துகிறார்கள் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்போல. இந்துத்துவாவை மக்கள் மீது திணிக்கப் பார்கிறார்கள். மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக, தமிழ்நாடு முதன்முதலாக போராட்டம் நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
பின்னர் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “இந்திய தேசத்திற்கு ஏதாவது வருகிறது என்றால் எப்போதும் தமிழ்நாட்டில் இருந்து தான் தீப்பொறி பறக்கும். ஜனநாயக சக்திகளின் தொடர்ச்சியான போராட்டங்களினால் எப்படி, வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றார்களோ அதேபோல் இந்த 3 குற்றவியல் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்ப பெறும்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!