Tamilnadu
ரூ.100 கோடி நில மோசடி வழக்கு : அதிமுக முன்னாள் அமைச்சர் MR விஜயபாஸ்கர் வீட்டில் CBCID சோதனை !
கரூர் மாவட்டத்திற்குட்பட்ட குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். தொழிலதிபரான இவர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கடந்த 14-ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார். அவர் அளித்த புகார் மனுவில், ”நான் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்துறை அமைச்சராக இருந்து போது, அரசு ஒப்பந்த பணிகளுக்காக எனது கடையில் இருந்து எலக்ட்ரிக் பொருட்களை அதிக அளவுக்கு வாங்கி வந்தார். இதனால் அவருடன் நட்பு ஏற்பட்டது.
இதையடுத்து வெள்ளியணையில் தனக்கு சொந்தமாக உள்ள ரூ.100 கோடி மதிப்புடைய 22 ஏக்கர் நிலத்தை, விஜயபாஸ்கர் தனக்கு எழுதி கொடுக்கும் படி கேட்டார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். பின்னர் அந்த 22 ஏக்கர் நிலத்தை எனது மகளுக்கு தான செட்டில்மெண்ட் எழுதி கொடுத்து விட்டேன். ஆனால் அசல் பத்திரங்கள் என்னிடம் தான் உள்ளது.
இந்நிலையில், அந்த செட்டில்மெண்ட் பத்திரம் தொலைந்து விட்டதாக காவல் நிலையத்தில் பொய்யான புகார் அளித்து, அதை கண்டுபிடிக்க முடியவில்லை என சான்றிதழ் பெற்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேறு நபர்களுக்கு அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளார்.
இதுபற்றி அறிந்து நான் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் முறையிட்டேன். அப்போது அவர் நிலத்தை எழுதி கொடுக்கும் படி மிரட்டினார். பின்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், அதிமுக வழக்கறிஞர் சங்க தலைவர் மாரப்பன் உள்ளிட்ட சிலர் என்னை கடத்தி சென்று அடித்து துன்புறுத்தினர். எனவே எனக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் இருந்து போலிஸார் மீட்டு தரவேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை முதல் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளிலும், மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் வீட்டிலும், வேலாயுதம்பாளையம் உள்ள செல்வராஜ் என்பவர் வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தலைமறைவாகவுள்ள விஜயபாஸ்கள், ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!