Tamilnadu
அள்ள அள்ள பொக்கிஷம் : வெம்பக்கோட்டை அகழாய்வில் நாயக்கர் கால செம்புக் காசுக் கண்டெடுப்பு!
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18 ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது.
இந்த அகழாய்வில், கண்ணாடி மணிகள், கல் மணிகள், பழங்காலச் செங்கற்கள், சுடுமண், கூம்பு வடிவ அகல் விளக்கு கண்டுக்கப்பட்டன. மேலும் மாவுக் கல்லால் ஆன கழுத்தில் அணியக்கூடிய அணிகலனில் கீழே கோர்க்கப்படும் தொங்கணி கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் அகழாய்வில் 30.7 மி. மீ உயரமும் 25.6 மி. மீ அகலம் கொண்ட சுடுமண்ணால் ஆன பெண்ணின் தலைப்பகுதி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மதுரை நாயக்க மன்னரான வீரப்ப நாயக்கர் காலத்தில் புழக்கத்தில் இருந்த செம்புக காசுக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இக்காசின் முன் பக்கத்தில் சிவபெருமான் அமர்ந்த நிலையிலும் பின்பக்கத்தில் “ ஶ்ரீ வீர” என்ற தெலுங்கு எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. பரவலாகக் காணப்படும் இவ்வகைக் காசுகளில் பொதுவாக சிவபெருமானின் அருகே பார்வை தேவி அமர்ந்த நிலையில் காணப்படும். ஆனால், இக் காசில் சிவபெருமானின் திருவுரு மாத்திரமே காணப்படுகிறது.
Also Read
-
பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி... தமிழ்நாடு அரசின் அசத்தல் அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
‘சமூகநீதி விடுதிகள்’ : முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் வரவேற்பு!
-
சமூகநீதி விடுதிகள் : "முதலமைச்சரின் சிறந்த சமூக நீதி சமத்துவ சிந்தனை இது" - கே.பாலகிருஷ்ணன் பாராட்டு !
-
4 மணி நேரம் - 10 துறைகள் குறித்து ஆய்வு : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியது என்ன?
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான 4 அறிக்கைகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிய மாநில திட்டக்குழு!