Tamilnadu
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த காரணம் இதுதான் : முத்தரசன் விளக்கம்!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.
இந்நிலையில், விக்கிரவாண்டி தெற்கு ஒன்றியம் நேமூர் கூட்டு சாலையில் அன்னியூர் சிவாவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரித்தார். மேலும் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், மூர்த்தி, செஞ்சி மஸ்தான் ஆகியோரும் உதயசூரியன் சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது பேசிய முத்தரசன், ” மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என கல்விக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
நாங்கள் பிரதான கட்சி என்று சொல்லும் அ.தி.மு.க விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன்?. பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் இடையே இருக்கும் கள்ளக் கூட்டணியால்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடாமல் விலகியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.கவின் ஆசீர்வாதத்தோடு ஒரு கட்சி நிற்கிறது. பா.ம.கவும், பா.ஜ.கவும் சந்தர்ப்பவாத கூட்டணி" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!