Tamilnadu
அதிமுக ஆட்சியில் நடந்த அதானி குழும நிலக்கரி ஊழல் : விசாரணையை தொடங்கியது லஞ்ச ஒழிப்புத்துறை!
முந்தைய அதிமுக ஆட்சியில் அதானி குழுமத்திடமிருந்து நிலக்கரி வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.
அதன்படி, கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரியில், தமிழ்நாடு அரசுக்கு தரமற்ற நிலக்கிரியை மூன்று மடங்கு அதிக விலைக்கு அதானி குழுமம் விற்பனை செய்ததாக கூறப்பட்டிருந்தது. இதன்மூலம் 6 ஆயிரத்து 66 கோடி ரூபாய் அளவுக்கு அதானி குழுமம் லாபம் ஈட்டியதாகவும் அறப்போர் இயக்கம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, இது குறித்து விசாரணை நடத்துமாறு அப்போதைய அதிமுக அரசிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. 2012 மற்றும்16 ஆம் ஆண்டு காலத்தில் அதானி குழுமத்திடமிருந்து 2.44 கோடி மெட்ரிக் டன் நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியம் இறக்குமதி செய்ததில், ஊழல் நடைபெற்றதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் அப்போதைய அதிமுக அரசு விசாரணை நடத்தவில்லை.
இந்நிலையில், முந்தைய அதிமுக ஆட்சியில் அதானி குழு நிலக்கரி இறக்குமதி ஊழல் தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கியுள்ளது. இது தொடர்பான விசாரணையை 2 மாதங்களில் முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த த.வெ.க மருத்துவ அணி நிர்வாகி : வலுக்கும் கண்டனங்கள்!
-
த.வெ.க ஆட்சியில் டெண்டர் ஊழல் அம்பலம் : நடந்தது என்ன?
-
”கோயபல்ஸ் உத்தியை பின்பற்றும் தவெக.. பொய் மேல் பொய்.. போலிக்கே போலி.. தவெக-வின் முரட்டு உருட்டுகள்”
-
கரூர் விவகாரம் - உண்மை வெளிவந்துவிடும் என்பதால் காவல்துறை அதிகாரிகளை மாற்றிய விஜய் : டி.கே.எஸ் இளங்கோவன்!
-
கலைஞரின் 103 ஆம் பிறந்த நாள் - 4 மாநிலங்களில் 103 பரப்புரைக் கூட்டங்கள் : ஆசிரியர் கி.வீரமணி அறிவிப்பு!