Tamilnadu
பெண் தொண்டரிடம் ரூ.2.5 லட்சம் மோசடி : பாஜக மாவட்டச் செயலாளர் மீது பரபரப்பு புகார்!
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவமணி. இவர் பா.ஜ.க கட்சியில் உறுப்பினராக இருக்கிறார்.இவரிடம் கடந்த 2022 ஆம் ஆண்டு, பா.ஜ.க வட சென்னை மாவட்ட செயலாளர் செந்தில் என்பவர்,ரயில் நிலைய நடைமேடையில் கடை வைக்க ஏற்பாடு செய்து தருவதாக கூறி ரூ.2.5 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
மேலும் இந்த பணத்தை நவமணி வட்டிக்கு வங்கி கொடுத்துள்ளார். ஆனால் சொன்னபடி கடைவைக்க செந்தில் ஏற்பாடு செய்யவில்லை. இதனால் வட்டி கட்ட முடியாமல் நவமணி திணறியுள்ளார்.
இதனால் கொடுத்த பணத்தை செந்திலிடம் திரும்ப கேட்டுள்ளார். அப்போது பணத்தை திருப்பி தர முடியாது என ஆணவமாக கூறியுள்ளார். பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர்.
இதனால் ஆத்திரமடைந்த செந்தில், பா.ஜ.க வக்கீல்களை வைத்து நவமணியை மிரட்டி உள்ளார்.இந்நிலையில் வட்டி பணம் கட்ட முடியாத நிலையில் நவமணி தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதைப்பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள நிலையில் நவமணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பத்தை குறித்து நவமணி கணவர் கூறுகையில்தன் மனைவி தற்கொலை முயற்சி செய்ததற்கு பாஜக மாவட்ட செயளாலர் செந்தில் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!