Tamilnadu
ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மோசடி : பா.ஜ.க நிர்வாகி கைது!
சென்னை மடுவங்கரை பகுதியைச் சேர்ந்தவர் முகைதீன் பாத்திமா பீவி. இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு அம்பத்தூர் பகுதியில் 2,347 சதுரடி நிலத்தை ஏழுமலை மற்றும் தனசேகர் ஆகியோரிடம் விலைக்கு வாங்கியுள்ளார்.
இதையடுத்து கடந்த ஆண்டு இந்த நிலம் தொடர்பாக வில்லங்கம் சரிபார்த்துள்ளார். அப்போது இவரது பெயரில் போலியான ஆவணங்களைக் கொண்டு பத்மநாபன் என்பவர் நிலத்தைப் பதிவு செய்தது தெரியவந்தது.
இந்த நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியாகும். பின்னர் இது குறித்து முகைதீன் பாத்திமா பீவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி நடந்தது உறுதியானது. இதையடுத்து பத்மநாபனை போலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பத்மநாபன் சோலைநகர் பா.ஜ.க ஒன்றிய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!
-
“மரியாதையும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது குழந்தைகளின் உரிமை!” : கனிமொழி எம்.பி!
-
கிரிக்கெட் விளையாட்டு : பந்து தலையில் தாக்கி 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம் - காஞ்சியில் அதிர்ச்சி!
-
கிராண்ட் ஸ்லாம் ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது.. கோடிகளில் பரிசுத் தொகை.. களமிறங்கும் முன்னணி வீரர்கள்!
-
திமுக தலைவருக்கான பாதுகாப்பு குறைப்பு.. தவெக அரசின் அரசியல் உள்நோக்கமா? : தலைவர்கள் கடும் கண்டனம்!