Tamilnadu
அன்று கலைஞர்.. இன்று தளபதி : 40/40 வரலாற்று வெற்றி வாகை சூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
எனினும் பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும், அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் யாரை ஆதரிக்கிறார்களோ அந்த கூட்டணியே தற்போது ஆட்சியமைக்கும் சூழல் நிலவுகிறது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணி புதுச்சேரி உள்ளிட்டு 40 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் தி.மு.க 21 தொகுதிகளில் போட்டியிட்டது.
தேர்தல் முடிவுகளை அடுத்து தி.மு.க கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்களில் போது நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற முழுக்கத்தை விண் அதிர முழங்கினார் தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தற்போது அது மெய்யாகியுள்ளது.
நாற்பது தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது. மேலும் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்காக வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கலைஞர் வழியில்தான் இந்த திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதை அடிக்கடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கோள் காட்டி வருகிறார். தற்போது அதை நிரூபித்து காட்டியுள்ளார்.
2004 ஆம் ஆண்டு கலைஞர் தலைமையிலான தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு 2024 ஆம்ஆண்டு மக்களவை தேர்தலிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கலைஞர் வழியில் தளபதி நல்லாட்சி நடத்துவதை இது காட்டுகிறது.
Also Read
-
நிலத்தை சமன் செய்யும்போது கிடைத்த 1 இல்ல 2 இல்ல... 86 தங்க நாணயங்கள்... திருப்பத்தூரில் நடந்தது என்ன?
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!
-
தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!
-
திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
-
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!