Tamilnadu
கொளுத்தும் வெயிலால் கோடை விடுமுறை நீட்டிப்பு... பள்ளிகள் திறப்பு எப்போது? - புதிய அறிவிப்பு!
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு முடிந்து கோடை விடுமுறை நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மே மாதம் முழுவதும் கோடை வெயிலை முன்னிட்டு மாணவர்களுக்கு அம்மாதத்தில் விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பள்ளிகள் திறப்பு வரும் ஜூன் 6-ம் தேதி என்று பள்ளிக்கல்வித்துறை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, அவர்களுக்கு புத்தக விநியோகம் செய்திடவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இந்த முறை கோடை வெயில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அண்மையில் கோடை காலத்தில் வந்த ரீமல் புயல் கரையை கடந்த பிறகு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த வகையில் தற்போது வெயில், வெப்பம் உள்ளிட்டவையின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு மிகவும் சிரமத்துக்கு உள்ளாவர்.
இதனை கருத்தில் கொண்டு தற்போது மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு தேதியை ஜூன் 6-ல் இருந்து ஜூன் 10-க்கு ஒத்திவைத்துள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. ஏற்கனவே புதுச்சேரியில் ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜூன் 10-ம் தேதி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!