Tamilnadu
கட்டணங்களை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும்: கலை அறிவியல் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு !
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 6ஆம் தேதி வெளியான நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகள் குறித்த அரசாணையை உயர்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.
அதில் அனைத்து வகை கலை அறிவியல் கல்லூரிகளும் பாடவாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விபரங்களை உயர்கல்வித்துறை அறிவித்துள்ள www.tngasa.in என்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போன்று மாணவர் சேர்க்கை விதிமுறைகளை 100 விழுக்காடு அளவிற்கு அனைத்து கல்லூரிகளும் கடைபிடிக்க வேண்டும் என்றும்,விதிமுறைகளை மீறினால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்களும், மாணவர் சேர்க்கை குழுவுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை செயலாளர் எச்சரித்துள்ளார்.
அதோடு மாணவர் சேர்க்கையை தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கட்டண விபரங்களை சில கல்லூரிகள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்று புகார் எழுந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Also Read
-
புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? : ஏன் எற்றப்படுகிறது- எதை உணர்த்துகிறது!
-
சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் நீர் தேக்கம் இல்லை! : சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன?
-
விஜய் அனுப்பிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்!
-
“வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஆபத்தானது” : The Hindu நாளிதழ் தலையங்கம்!
-
மோன்தா புயல் : சென்னை - ஆந்திரா இடையே 9 விமானங்கள் ரத்து!