Tamilnadu
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யபிரசாத். இவர் இந்து முன்னணி நகர தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி செல்வ புரத்தில் மீன் கடை நடத்தி வரும் அசாருதீன் என்பவர், தன்னை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாகவும், அதனால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் கூறி செல்வ புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் அசாருதீன் ஆய்வுக்கு உட்படுத்தியபோது சூர்யபிரசாத் தொடர்பான புகைப்படமோ மற்றும் வீடியோவோ இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அசாருதீன் செல்போனை போலிஸார் திருப்பி அளித்ததுடன் இது குறித்து சூர்யபிரசாத்திடம் விசாரணை மேற்கொண்டர்.
அப்போது, முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்த நிலையில் அவரிடம் விசாரானையை தீவிரப்படுத்தியதில் தனக்குத் தனி போலிஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக இஸ்லாமியர் ஒருவர் தன்னை புகைப்படம் எடுத்ததால் உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் கூறி நாடகம் ஆடியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 5 பிரிவுகளின் கீழ் போலிஸார் சூர்யபிரசாத் மீது கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் தான் சூர்யபிரசாத் கோவை ரயில் நிலையம் பகுதியில் இஸ்லாமிய ஆட்டோ ஓட்டுனர் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டதாக பந்தைய சாலை போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!