Tamilnadu
“தேர்தல் ஆணையம், பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளது” - அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம் !
சென்னை மண்ணடியில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிர்வாகிகளை அமைச்சர் சேகர்பாபு மற்றும் வட சென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோர் கூட்டாக சந்தித்து நேற்று ஆதரவு பெற்றனர். இதன்பின்னர் மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் சேகர்பாபு வாக்கு சேகரித்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஏற்கனவே பாஜக அமலாக்கதுறை, வருமானவரித்துறையினருடன் கூட்டணி வைத்திருந்த நிலையில், தற்போது புதிதாக தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துள்ளது. தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது.
பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னத்தை கொடுத்துள்ளது. ஆனால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்ட சின்னத்தையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேட்ட சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் செயலையும் கூட நாட்டு மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எங்களுக்கு சின்னம் பற்றி கவலை இல்லை. 40 தொகுதிகளிலும் மக்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகத்தைதான் பார்க்கிறார்கள். இந்த 40 தொகுதிகளிலும் திமுக, இந்தியா கூட்டணிதான் மாபெரும் வெற்றி பெறும்" என்றார்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!