Tamilnadu
”தி.மு.க-வை அழிக்க இந்த நாட்டில் எந்த கொம்பனும் பிறக்கவில்லை” : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்!
தமிழ்நாட்டில் ஏப்ரல்.19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணியில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் ஆம்பூரில் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், " இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. ஜனநாயகம், அரசியல் சட்டத்தை காப்பதற்கான தேர்தல்.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தி.மு.கவை சுக்கு நூறாக உடைப்பேன் என பிரதமர் மோடி பேசுகிறார். ஒரு தலைவர் இப்படியா பேசுவது. தி.மு.க என்ன பூச்சியா நசுக்கிவிட. தி.மு.க என்பது நெருப்பாற்றில் பூத்தப் பூ. ஒரு போதும் அழிக்க முடியாது.
தி.மு.கவை அழிக்க இந்த நாட்டில் எந்த கொப்பனும் பிறக்கவில்லை. தி.மு.கவை அழிப்பேன் என்று சொன்ன ராஜகோபாலச்சாரியார் மூட்டைப் பூச்சி போல் அழிந்துபோனார். உடல், பொருள், ஆவி அனைத்தும் கழகத்திற்காக நாங்கள் ஒப்படைத்துள்ளோம்" என உணர்ச்சி பொங்கப் பேசியுள்ளார்.
Also Read
-
“சபரிவர்மனின் மர*த்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
-
கொத்தடிமை ஒப்பந்தம்: ஆத்தூர் நகராட்சியின் அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கு DMK IT WING கண்டனம்
-
த.வெ.க அரசு என்ன டாஷ் பண்ணிட்டு... : பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரம் - DMK IT WING கண்டனம்!
-
மலையடிப்பட்டி அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!