Tamilnadu
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாள் : இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்து !
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு கழக தொண்டர்கள், இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் கழக தொண்டர்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
அதோடு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்து பலரும் தங்கள் வாழ்த்துகளையும் பரிசுகளையும் வழங்குகின்றனர். தொடர்ந்து முதலமைச்சருக்கு பிரதமர், துணை குடியரசு தலைவர், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
= > கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் :
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்புத் தோழர். நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள ஜனநாயகம் மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதில் உங்கள் உறுதியான தீர்மானம் மிகவும் ஊக்கமளிக்கிறது.
= > டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆரோக்கியமான வாழ வாழ்த்துகிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
= > உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் :
மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்துகள். இந்த ஆண்டு மகிழ்ச்சியும், வெற்றியும் கூடட்டும்.
= > பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்.
= > காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே :
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்.
= > பிரதமர் மோடி :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.
= > துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுற்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.
= > தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் :
தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Also Read
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!