Tamilnadu
இந்தியாவிலேயே முதன்முறை : தமிழ்நாட்டில் திறக்கப்பட்ட முதியோருக்கான சிறப்பு மருத்துவமனை !
சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் பிரதமர் நரேந்திரமோடி காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். அதன் பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குத்து விளக்கேற்றி மருத்துவ மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த ஜூன் மாதத்தில் 430 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை மக்களுக்கு முதலமைச்சர் அர்ப்பணித்தார். தற்போது அதே மருத்துவமனையில் முதியோர் நல மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது.இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கலைஞர் ஆட்சியில் இருந்த போது முதியோர் நல மருத்துவ மையம் அறிவிக்கப்பட்டது, முதியோர் மருத்துவமனை என்றால் பெரிய அளவில் இடம் வேண்டும் என்று இங்கு கிண்டியில் அமைக்கப்பட்டது.
இந்த கட்டிட பணி 2019 முடிவுற்று, கொரோனா பேரிடர் காலத்தில் சிகிச்சை அளிக்க இந்த கட்டிடம் பயன்படுத்தப்பட்டது. அதற்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொடர் அழுத்தம் காரணமாக ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்து, இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. குளிர்சாதன வசதி, மேசை, நாற்காலி, தொலைக்காட்சி உள்ளிட்டவைகள் கொண்ட அறைக்கள் உள்ளன. இதில் 76 கட்டணம் அறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை ஒரு பின் தாங்கிய பகுதி என்பதால் குறைந்தபட்சம் அறைக்கு 900 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் வயது முதியோருக்கான மருத்துவமனை இன்றைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. 2007 ஆம் ஆண்டு தொடங்கி திட்டமிடப்பட்டு பல்வேறு நிலைகளைக் கடந்து இன்றைக்கு பணிகள் நிறைவுற்று முதலமைச்சர் அவர்கள் தொடர்ச்சியாக எடுத்த முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது. பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்திருக்கிறார்.
பிரத்தியாக நோய்களுக்கான அறிவுத்திறன் குறைபாடு மற்றும் நிலை தடுமாறி விழுதல், எலும்பு தேய்மானம் சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமல், நாள்பட்ட வலி உள்ளிட்ட வகைகளுக்கு கண்டறியும் சிகிச்சைக்கான சிறப்புக் குறியீடுகளும் 24 மணி நேரமும் இங்கே இயங்குகிறது. கண் காது மூக்கு அறுவை சிகிச்சை தொண்டைகள் சிறுநீரக அறுவை சிகிச்சைகள் போன்ற முக்கிய சேவைகளும் இந்த மையத்தில் முதியவர்களுக்கு அளிக்க இருக்கிறது இங்கே அதிநவீன வசதிகளும் இந்த மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை பல்வேறு புதிய வசதிகளுடன் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது 200 படுக்கை வசதிகள் உள்ளது.
200 படுக்கைகள் மட்டுமல்லாமல் 40 தீவிர சிகிச்சை படுக்கைகள், 20 கட்டணப்படுக்கைகள் என்கின்ற வகையில் கட்டண அறைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணப் படுக்கைகள் பொறுத்தவரை ஒவ்வொரு அறையிலும் குளிர்சாதன அறை, தொலைக்காட்சிப் பெட்டி, ஷோபா, மேசை மற்றும் நாற்காலி, பீரோ போன்ற வசதிகளுடன் ஒவ்வொரு அறையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதியோரைப் பொறுத்தவரை மருத்துவத்திற்கு வருபவர்கள் பார்வை திறன் குறைபாடு, ஞாபக சக்தி போன்ற பல்வேறு சிகிச்சைகளுக்கான வருபவர்கள் 24 மணிநேரமும் படுக்கை அறைகளில் தங்குவது அவசியமற்ற ஒன்று என்பதாலே அவர்கள் மாலை நேரங்களில் ஓய்வு எடுப்பதற்கும், இளைப்பாறுவதற்கும் வசதியாக நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. நூலகம் மட்டுமல்லாமல் அவர்கள் ஓய்வு நேரத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும்வகையில் கேரம் போர்டு, செஸ் பலகைகள், பல்லாங்குழி போன்ற தமிழர்களின் விளையாட்டுகள் தொடர்பாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது" என தெரிவித்தார்.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?