Tamilnadu
நாடாளுமன்றத் தேர்தல் : திமுக கூட்டணியில் 2 கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கீடு: எந்த கட்சிகள்? எத்தனை தொகுதி?
இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாகப் பாசிச ஆட்சியை நடத்தி வரும் பா.ஜ.கவை வீழ்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கித் தேர்தல் களத்தில் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுகிறது.
இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 'இந்தியா' கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டிலும் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்றே அழைக்கப்படுகிறது.
அண்மையில் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு MP பேச்சுவார்த்தை குழு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டணிக் கட்சிகளுடன் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது.
இன்று 2 ஆம் கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இராமநாதபுரம் ஒரு தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. பின்னர் அக்கட்சி தலைவர் கே.எம். காதர் மொய்தீன் மற்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டது.
அதேபோல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் நாமக்கல் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !