Tamilnadu
”பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன்” : மோடியின் நாடாளுமன்ற உரையை விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு கடந்த ஜனவரி 29ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். பின்னர் அங்கு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
இந்த பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஹபக் லாய்டு நிறுவனம் ரூ. 2500 கோடிக்கு முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல், எடிபான் நிறுவனம் ரூ. 540 கோடியும், ரோக்கா நிறுவனமும் ரூ.400 கோடியும் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஆக்சியானா, ரோக்கா, ஹபக்-லாய்டு, அபர்ட்டிஸ், கெஸ்டாம்ப், டால்கோ, எடிபான், மேப்ட்ரீ ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆர்வம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் இருந்து இன்று சென்னை திரும்பினார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்றத்தில் பிரதமர் உரை நிகழ்த்தியிருக்கிறார். பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அது தொடர்பாக, அந்த நிகழ்வுகளை எல்லாம் நீங்கள் பார்த்தீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பார்த்தேன். படித்தேன். ரசித்தேன். சிரித்தேன். ஏனென்றால், பிஜேபி தான் எதிர்க்கட்சி போலவும், காங்கிரஸ் ஆளுங்கட்சி போலவும், அவர் தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததிலிருந்து, எதிர்க்கட்சியாக அவர் செயல்பட்டுக் கொண்டு, ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருப்பது போல attack செய்வது போலவும் பேசிக் கொண்டிருக்கிறார். இதுதான் புரியாத புதிராக இருக்கிறது." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மீண்டும்... மீண்டும்.. அன்று பார்க்.. இன்று சிவகாசி.. ரயில் நிலையம் மூலம் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசு!
-
11.60 இலட்சம் மக்களுக்காக... 7 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தொடக்கம்! : திராவிட மாடலின் மற்றொரு சாதனை!
-
ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை திறப்பு! - முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் கைவினைப் பொருட்களின் கண்காட்சி... தொடங்கி வைத்த முதலமைச்சர் - முழு விவரம்!
-
U19 உலகக்கோப்பை : இறுதிப்போட்டிக்குள் Entry கொடுத்த இந்திய இளம் அணி.. துவம்சம் செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான்!