Tamilnadu
”வெள்ள நிவாரண நிதி - ஒரு பைசாகூட வழங்காத ஒன்றிய அரசு” : மக்களவையில் ஆ.ராசா MP ஆவேசம்!
இந்த ஆண்டு மே மாதத்தோடு ஒன்றிய அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் ஒன்றிய பா.ஜ.க அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.
பின்னர் அடுத்தநாள் பிப்.1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, தி.மு.க கொறடா ஆ.ராசா எம்.பி. தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றஞ்சாட்டினார்.
அப்போது பேசிய ஆ.ராசா எம்.பி,"வெள்ள பாதிப்புகளில் இருந்து தமிழ்நாட்டை மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்தித்து ரூ.37 ஆயிரம் கோடி நிவாரண நிதி கேட்டார். மேலும் தமிழ்நாடு அனைத்துக் கட்சிக் குழு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நிவாரண நிதி வழங்க வலியுறுத்திய போதும் ஒன்றிய அரசு ஒரு பைசாகூட வழங்கவில்லை.
மாநில பேரிடர் மேலாண்மை நிதியை வெள்ள நிவாரண நிதி என்று கூறுவது ஏமாற்றும் செயல். குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு பாரபட்சம் காட்டுகிறது, தேசிய பேரிடர் நிவாரண நிதியை அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக வழங்கும் வகையில் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!