Tamilnadu

”குடவோலை கண்ட தமிழ்க் குடியே” : டெல்லியில் கம்பீரமாகச் சென்ற தமிழ்நாடு அலங்கார ஊர்தி!

நாடு முழுவதும் இன்று 75 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் 21 குண்டுகள் முழங்கத் தேசிய கொடியை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும் இந்த குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார். அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் முப்படை ராணுவ தளபதிகள் உள்ளிட்ட பலர் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டார்.

இந்த குடியரசு தின விழாவில் முப்படை ராணுவ வீரர்களின் அணிவகுப்புகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதேபோல் மாநிலங்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்துச் சென்றது.

இதில், பழங்கால தமிழ்நாட்டின் தேர்தல் நடைமுறையை விளக்கும் வகையில் 'குடவோலை கண்ட தமிழ்க் குடியே' என்ற பாடலுடன் கம்பீரமாக அலங்கார ஊர்தி சென்றது. இந்த அலங்கார ஊர்தி அங்கிருந்தவர்களை கவர்ந்து ஈர்த்தது.

Also Read: ”தமிழ்நாடு அரசிடம் இருந்து விருது கிடைத்தது மகிழ்ச்சி” : ஊடகவியலாளர் முகமது ஜூபேர் !