Tamilnadu
பெற்றோர் கண்முன்னே உயிரிழந்த 2 பெண் குழந்தைகள் : புத்தாண்டு தினத்தில் நடந்த சோகம்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன். இவர் தனது மனைவி காவேரி மற்றும் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆம்பூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, மாராப்பட்டு பகுதியில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சாலையில் முன்னாள் சென்ற லாரி திடீரென திரும்பியது. இதனால் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது.
இதில் கீழே விழுந்த பரந்தாமனின் இரண்டு பெண் குழந்தைகளான கார்த்திகா ஸ்ரீ (9), பேரரசி (6) ஆகிய இருவரும் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் குழந்தைகள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் பெற்றோர்கள் கண்முன்னே குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!