Tamilnadu
மீண்டு வரும் சென்னை - 5 ஆவது நாளாகக் களத்தில் அமைச்சர்கள் மற்றும் தி.மு.கவினர் - மக்களை காக்கும் அரசு!
மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து 5ம் தேதி வரை அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்தனர்.
பின்னர் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் கடந்த 5 நாட்களாக இரவு பகல் பாராமல் நடந்து வருகிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. மேலும் தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த டிச. 5ம் தேதி இரவிலிருந்தே முதலமைச்சரின் உத்தரவை அடுத்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.கவினர் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அரசின் மீட்புப் பணிகளுக்குத் துணைநின்று தன்னார்வலர்கள் பலரும் உதவி செய்து வருகிறார்கள்.
அதோடு மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குத் தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் - நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களுடைய ஒரு மாத கால ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல், இத்தகைய அசாதாரண நேரத்தில் அனைத்துத் தரப்பும் மக்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பின்னர் முதலமைச்சரின் வேண்டுகோளை அடுத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். அதேபோல் அரசியல் கட்சிகளும், பிரபலங்களும், நிறுவனங்களும் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள்.
இப்படி மக்களை மீட்பதற்காகத் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. நான்கு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் அகற்றினாலும், தேங்கியுள்ள பகுதிகளில் மழைநீரை அகற்றுவதற்கான பணி வேகமாக நடந்து வருகிறது.
இன்றும் கூட மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் , மறுசீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதேபோன்று, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, நேரு, மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவசங்கர், மூர்த்தி, சக்கரபாணி உள்ளிட்ட அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்து 5-வது நாளாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையால் மக்கள் பேராபத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!