Tamilnadu
வாங்க விவாதிக்க நான் தயார் : குறை சொல்லும் கூட்டத்திற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் 3000 சிறப்பு மழைக்கால மருத்துவ முகாமை இன்று சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை சைதாப்பேட்டை கோதமேடு பகுதியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இன்று தமிழ்நாடு முழுவதும் 3000 சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. சென்னையில் 500 இடங்களில் இலக்கு என்றாலும் 679 இடங்களில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது.
அதேபோல் மழை வெள்ளம் பாதித்த திருவள்ளூர் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று மருத்துவ முகாம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த முகாமில் மலேரியா, காய்ச்சல், தொண்டை வலி, சளி , சேற்றுப்புண் உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்கு மருத்துவம் பார்த்து மருந்துகள் வழங்கப்படுகிறது.
கடந்த 6 வாரங்களில் 13,234 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,50,585 பேர் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் புயல் பாதிப்பு மழைவெள்ள பாதிப்பு இருந்த போதிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி மழைக்கால நோய் தடுப்பு பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தி.மு.க சார்பில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டையில் 40-50 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
ஒரு சில இடங்களில் பெண்களை கோவமாக பேசுவதை, அதிமுக உள்ளிட்ட சில கட்சியினர் செல்போனில் விடியோ எடுத்து பரப்புகிறார்கள். 20 செ.மீ மழை பெய்தாலும் மழை தேங்காது என்று நான் சொன்னதை ட்ரோல் செய்கிறார்கள். நான் சொல்லி சில நாட்களிலேயே 18 செ.மீ அளவிற்கு மேல் மழை பெய்தது. அப்போது தண்ணீர் தேங்கவில்லை. ஆனால் இயல்பை விட 10%-12% அதிக மழை பொழிவு இருந்துள்ளது மழைநீர் தேங்கியுள்ளது. விமர்சனங்கள் செய்யும் முன் மனசாட்சியுடன் யோசிக்கவேண்டும்..
தூக்கமின்றி வேலைச் செய்பவர்கள் மனதைப் புண்படுத்தக்கூடாது. மன்சூர் அலிகான் கார் மீது அமர்ந்துகொண்டு செம்பரம்பாக்கம் ஏரி மீன் இங்கு வந்து விட்டது என்கிறார். நல்லது. வறுத்துச் சாப்பிடட்டும். எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்ட யாராக இருந்ததாலும் நீங்கள் எல்லாம் ஒரு பக்கம் அமருங்கள் நான் மறுபக்கம் அமருகிறேன். விவாதிக்க நான் தயாராகவுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!
-
தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு அறிவிப்பு!
-
“சிகிச்சை அளிக்க மறுத்தால் நடவடிக்கை” : தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
-
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் : ரூ4.12 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் அசத்தல்!