Tamilnadu
162 நிவாரண மையங்கள்- 20 சமையல் கூடங்கள் : வேகவேகமாக நடந்து வரும் மீட்புப் பணி!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவிலிருந்து அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து உடனே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறனர்.
மேலும் வெள்ளம் அதிகமாகத் தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.
சென்னையில் மட்டும் 162 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2477 பொதுமக்கள் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்குவதற்காக 20 சமையல் கூடங்கள் செயல்பட்டு வருகின்றனர்.
அதேபோல், மழைநீர் அதிகம் தேங்கியுள்ள மடிப்பாக்கம், பெரியார் நகர், ராம் நகர், பள்ளிக்கரனை போன்ற பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் தீயணைப்புத்துறையினர் படகுகள் மூலம் மக்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டு வருகிறது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!