Tamilnadu
”மனித வாழ்விலிருந்து பிரிக்க முடியாத துறை பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
தமிழ்நாடு பொதுப்பணித் துறை சார்பில் பொது உட்கட்டமைப்பில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்க கூட்டம் சென்னை கலைவானர் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "அரசின் மூலதனத்தை உருவாக்கும் துறை பொதுப்பணித்துறை தான். இது ஒரு ஜீவநாடி துறை. ரயில்வே, மின்சாரத்துறை, நெடுஞ்சாலை, வீட்டுவசதி, குடிநீர் , காவல்துறை, நீர்வளத்துறை என பலத் துறைகளுக்கு தாய்த்துறை பொதுப்பணித்துறைதான்.
பாரம்பரிய கட்டடங்களை பராமரிப்பு செய்யும் பணியினையும் பொதுப்பணித்துறைதான் செய்கிறது. இந்த துறையை மேலும் மேலும் வளர்த்தெடுப்பதில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். மனித வாழ்விலிருந்து பிரிக்க முடியாத துறை பொதுப்பணித்துறை. கூட்டு முயற்சி தான் வெற்றி பெறமுடியும். இலக்கு வைத்து உழைக்கின்ற போது தான் துறையை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும்.
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு நூலகம், நினைவிடம் உள்ளிட்டவற்றை பொதுப்பணித்துறை மிகச் சிறப்பாகச் செய்துள்ளது. எனக்கு பொறியியல் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. மனித வாழ்க்கையும் பெரிதும் உதவியது சிவில். ஆற்றலையும் அறிவியலையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!