Tamilnadu
10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது ? - முழு கால அட்டவணை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை - முழு விவரம்!
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 12-ம் வகுப்புக்கான கடந்த 2022 - 2023 கல்வியாண்டின் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. இந்த சூழலில் இந்த 2023 - 2024 கல்வியாண்டின் பொதுத்தேர்வு தேதி தற்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் 10 முதல் 12-ம் வகுப்பௌ வரையிலான வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
அதன்படி 10-ம் வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதியும், 12-ம் வகுப்புக்கு மார்ச் 1-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு மார்ச் 4-ம் தேதியும் தொடங்கவுள்ளது. மேலும் மே 6-ம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும். 12-ம் வகுப்புக்கு மே 6-ம் தேதி தேதியும், 10-ம் வகுப்புக்கு மே 10-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு மே 14-ம் தேதியும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. இதனிடையே 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. முழு அட்டவணை பின்வருமாறு :
=>> செய்முறைத் தேர்வு :
10-ம் வகுப்பு : பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கி - பிப்ரவரி 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.
11-ம் வகுப்பு : பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி - பிப்ரவரி 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.
12--ம் வகுப்பு : பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கி - பிப்ரவரி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.
=>> பொதுத்தேர்வு அட்டவணை :
>> 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு :
26.03.24 - தமிழ் மற்றும் இதரமொழிப்பாடங்கள்
28.03.24 - ஆங்கிலம்
01.04.24 - கணிதம்
04.04.24 - அறிவியல்
06.04.24 - விருப்பமொழி பாடம்
08.04.24 - சமூக அறிவியல்.
>> தேர்வு முடிவுகள் - மே 10-ம் தேதி
>> 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு :
04.03.24 - தமிழ் மற்றும் இதரமொழிப்பாடங்கள்
07.03.24 ஆங்கிலம்
12.03.24 - இயற்பியல், பொருளியல்
14.03.24 - கணினி அறிவியல், புள்ளியியல்
18.03.24 - உயிரியல், தாவரவியல், வரலாறு
21.03.24 - வேதியியல், கணக்குபதிவியல்
25.03.24 - கணிதம், வணிகவியல்
>> தேர்வு முடிவுகள் - மே 14-ம் தேதி
>> 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு :
01.03.24 - தமிழ்
05.03.24 - ஆங்கிலம்
08.03.24 - கணினி அறிவியல் , புள்ளியியல்
11.03.24 - வேதியியல், கணக்குபதிவியியல், புவியியல்
15.03.24 - இயற்பியல் , பொருளியல், கணினி தொழில்நுட்பம்
19.03.24 - கணிதம், வணிகவியல், விலங்கியல், நுண் உயிரியல்
22.03.24 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்,பேஸிக் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், பேஸிக் சிவில் பொறியியல்,பேஸிக் ஆட்டோமொபைல் பொறியியல், பேஸிக் மெக்கானிக்கல் பொறியியல்,டெக்ஸ்டைஸ் டெக்னாலஜி, ஆஃபீஸ் மேனேஜ்மென்ட் அண்ட் செக்ரட்டரிஷிப்
>> தேர்வு முடிவுகள் - மே 6-ம் தேதி
Also Read
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!