Tamilnadu
”எத்தனை ED சோதனைகள் நடத்தினாலும் திமுக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் சுவாமிநாதன், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வேலு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,"பா.ஜ.க எத்தனை குட்டிக்கரணங்கள் அடித்தாலும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. எத்தனை ED,IT சோதனைகளை நடத்தினாலும் இரும்பு மனிதராக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியை இன்னும் கால் நூற்றாண்டுக்கு யாராலும் அசைக்க முடியாது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை போன்றவர்களுக்கு ஆட்சி அதிகார வாய்ப்பை எந்நாளும் தமிழ்நாட்டு மக்கள் வழங்க மாட்டார்கள்.
தஞ்சாவூர் தேவஸ்தானத்திற்கு இதுவரை மானியமே இல்லாமல் இருந்தது. இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு ரூ.3 கோடிக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. கோவில்களில் அன்னதான திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கத்தார் எரிவாயு ஆலையில் பயங்கர தீ விபத்து: 3 தமிழர்கள் உட்பட 13 பேர் பலி!
-
பிரதமர் அலுவலக மேற்பார்வையில் நடந்த நீட் மறுதேர்விலும் மோசடி : 30 பேர் கைது!
-
“மாணவர்களின் உயிரைக் குடிக்கும் நீட்.. மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்” : கொந்தளித்த முரசொலி!
-
Sticker தொடங்கி ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகாரம் வரை.. பேரவையில் விஜய் ஆட்சியை வறுத்தெடுத்த LoP உதயநிதி!
-
“தமிழ்நாட்டின் உரிமையை வலுவாக்கவே புதிய நடுவர் மன்றம்!” : தங்கம் தென்னரசு விளக்கம்!