Tamilnadu
மக்களே நாளைக்கு உஷார் : தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்த இந்தியா வானிலை ஆய்வு மையம்!
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதியிலும், தெற்கு வங்கக் கடல் பகுதியிலும் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்றிலிருந்தே சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்ட லேசான முதல் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் இன்று காலையிலிருந்தே சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் கிண்டி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, தியாகராய நகர் , அடையாறு, பெசன்ட் நகர், மத்திய கைலாஷ், கோடம்பாக்கம், வடபழனி, போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பொரும்பாலான இடங்களில் சில நிமிடங்கள் மிதமான மழை பெய்தது. இருப்பினும் மழை பெய்யும் சமயத்தில் வெயிலும் அடித்து வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு கேரளா, மாஹே மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் நாளை கன முதல் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்தியா வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!