Tamilnadu
“நாட்டு மக்களை பிளவுபடுத்திய கூட்டத்தை சேர்ந்தவர் ஆளுநர்” - அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்கு !
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தேரி அரசுப் பள்ளியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ - மாணவியர்கள் இணைந்து கட்டிக் கொடுத்துள்ள கழிவறைகளை இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியது பின் வருமாறு:
"படிக்கும் வயதில் மாணவர்கள் இதுபோன்ற சமூக சிந்தனைகளுடன் ஈடுபடுவது மிகவும் பாராட்டுக்குரியது. இந்த நாட்டிற்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு இளம் வயதில் உள்ளவர்களை அதிக அளவில் சமூகப் பணியில் ஈடுபடுத்துவதே ஆகும். எனவே அந்த வகையில் மாணவ, மாணவிகளின் இந்த முயற்சிக்கு நான் மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவிகளை மையமாக வைத்து தான் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இளைய சமுதாயம் சிறந்த சமுதாயமாக உருவாக வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கமாகும்.
தமிழ்நாட்டில் 11,000 பால் கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. இவற்றில் 4 மண்டலங்களாக பிரித்து தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை எவ்வாறு புனரமைப்பது, விவசாயிகளை எவ்வாறு அணுகுவது என்பது உள்பட மூன்று கட்ட பயிற்சி நடக்க இருக்கிறது. ஏற்கனவே பயிற்சி முகாம் தொடங்கி நடந்து வருகிறது. விரைவில் கூடுதலாக பத்தாயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
ஆவினைப் பொருத்தவரை சிறந்த கட்டமைப்பு கொண்டதாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதில் தவறில்லை; விவசாயிகளின் கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.
விடுதலைக்கு முன் நாட்டு மக்களை அடிமைப்படுத்தி, பிளவுபடுத்தி வைத்திருந்த கூட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு ஆளுநர், நாட்டின் விடுதலை தொடர்பாக இப்போது பேசி வருகிறார். அவருக்கு மனித விடுதலை குறித்து பேச எந்த உரிமையும் கிடையாது" என்றார்.
Also Read
-
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“மேற்கிலும் தி.மு.க தான் Best! இந்த எழுச்சிதான் அதற்கு உதாரணம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!