Tamilnadu
"மோடி ஆட்சியில் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் அச்சுறுத்தப்படுகிறது" : இந்து என்.ராம் ஆவேசம்!
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை வ.உ.சி மைதானத்தில் "இதழாளர் - கலைஞர்” புகைப்பட கண்காட்சியைப் பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் முத்துச்சாமி, சாமிநாதன், செஞ்சி மஸ்தான் மற்றும் தி இந்து என்.ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தி இந்து என்.ராம், "அரசியலில் கலைஞர் சாதித்ததை விட எந்த மூத்த தலைவர்களும் சாதித்ததாக தனக்குத் தெரியவில்லை. கலைஞருக்குப் பல திறமைகளுக்கு இருந்தது என்பதை இந்த கண்காட்சி நன்றாக எடுத்துக் கூறுகிறது. கலைஞர் பேச்சு சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் மதித்தார்.
பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள் எப்போது வேண்டுமானாலும் கலைஞரை பார்க்கச் செல்லலாம். செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் அமைதியாக நிதானமாகப் பதில் சொல்வார். எதற்காக மாநில சுயாட்சி வேண்டும் என பல கட்டுரைகள் எழுதியுள்ளார். நேர்காணல்கள் கலைஞர் கொடுத்துள்ளார்.
ஆனால் இன்றைக்குக் கருத்துச் சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் இந்தியாவில் அபாயத்தில் உள்ளது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை என்னென்னவோ பேசுகிறார் அவர் மீது வழக்குப் பதிவு செய்கிறார்களா?. நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தி உபா சட்டம் போடப்பட்டுள்ளது. இதை நாம் எதிர்க்க வேண்டும். மதச்சார்பின்மை ஜனநாயகம் இன்று ஆபத்தான நிலையில் இருக்கிறது. இதை நாம் பாதுகாக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!