Tamilnadu
நாடாளுமன்ற தேர்தல் : “மகளிர் உரிமை மாநாடு முக்கிய பங்காக இருக்கும்” - கனிமொழி எம்.பி பேட்டி !
சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஓய்.எம்.சி.ஏ இன்று மாலை திமுக மகளிரணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃதி உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த பெண் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதற்காக பெண் தலைவர்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். இதனை முன்னிட்டு நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து இன்று மெரினா கடற்கரையில் திமுக சார்பில் நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாடு குறித்த மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணல் சிற்பத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளரும் கனிமொழி நேரில் பார்வையிட்டார்.
இந்த மணல் சிற்பத்தில் கடந்த 2 ஆண்டு திமுக ஆட்சியில் மகளிருக்காக அமல்படுத்தப்பட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து இந்த சிற்பத்தை பொதுமக்கள் பலரும் கண்டு களித்து வருகின்றனர். இந்த மணல் சிற்பத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளரை சந்தித்த கனிமொழி எம்.பி, “பாஜக அரசு மக்களுக்கு இடையே விரோதத்தை அரசியல் காரணங்களுக்காக உருவாக்கும் பொழுது அதில் பெரும் அளவு பாதிக்க கூடியது பெண்கள் தான் இருக்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சென்னையில் இன்று மாலை திமுக சார்பில் நடைபெற உள்ள மகளிர் உரிமை மாநாட்டில் பல்வேறு தேசிய அளவிலான மிக முக்கியமான பெண் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முக்கிய குரலாக பாஜகவுக்கு எதிராக இருக்கும்.
நாடு முழுவதும் மக்களிடையே காழ்ப்புணர்வு அரசியலை உருவாக்கிக் கொண்டுள்ள ஒன்றிய அரசான பாஜக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்தில் மிகப்பெரிய அளவில் கொடூரமானவகளை அதிகமாக பெண்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு பகுதிகளில் பாஜக அரசு மக்களிடையே விரோதத்தை அரசியல் காரணங்களுக்காக உருவாக்கும் பொழுது அதில் பெரும் அளவு பாதிக்க கூடியது பெண்கள் தான் இருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே முற்றிலுமாக பெண்களுக்கு பாதுகாப்பான உணர்வு இல்லாத சூழ்நிலை சந்தித்து வருகிறோம். இப்படிப்பட்ட நிலையில் பெண்களுடைய குரல், பெண்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான கருத்துகளை மையப்படுத்தி இந்த மாநாடு இன்று சென்னையில் நடைபெற உள்ளது
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. இந்த நாட்டில் இருக்கக்கூடிய பெண்கள், அவர்களுடைய கருத்தை முன்னிலைப்படுத்துவதற்கும், பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நிச்சயமாக இந்த மாநாடு முக்கிய பங்காற்றும்” என்றார்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!