Tamilnadu
Gym-ல் உடற்பயிற்சிபோது சுருண்டு விழுந்த Mr.தமிழ்நாடு போட்டியாளர்.. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி!
சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். இவர் ஜிம்மில் டிரெய்னராக இருந்து வருகிறார். யோகேசுக்கு திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை உள்ளது. இவர் தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டு, தனது கடின முயற்சியால் Mr.தமிழ்நாடு, பட்டத்தை வெல்வதற்காக பாடுபட்டு வந்துள்ளார். இந்த சூழலில் கொரட்டூரில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் இதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
அப்போது அவருக்கு திடீரென சோர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த ரெஸ்ட் ரூமுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அங்கிருந்தவர்கள், அங்கே சென்று பார்க்கையில், மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த சக பயிற்சியாளர்கள் உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இதே போல் சில பயிற்சியாளர்கள் ஜிம்மில் பயிற்சி செய்யம்போது உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!