Tamilnadu
சாலையில் மயங்கி கிடந்த உணவு டெலிவரி இளைஞர்.. தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அமைச்சர் மா.சு!
சென்னை மதுரவாயில் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவரது கார் மேற்கு சி.ஐ.டி நகர் அருகே சென்றபோது பொதுமக்கள் சிலர் கூட்டமாகச் சாலையில் நின்று கொண்டிருந்தனர். உடனே காரை நிறுத்தி அங்குச் சென்று அமைச்சர் விசாரணை செய்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த உணவு டெலிவரி இளைஞர் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தது தெரியவந்தது.
உடனே பொதுமக்கள் உதவியுடன் இளைஞரை மீட்டு தனது காரி ஏற்றி கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். பின்னர் வேறு காரில் ஏரி அமைச்சர் அங்கிருந்து சென்றார்.
இதையடுத்து மருத்துவமனையைத் தொடர்புகொண்டு இளைஞரின் உடல் நிலை குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியனின் இந்த செயலுக்குப் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!