Tamilnadu
இறப்பிலும் பிரியாத தம்பதி.. கணவன் இறந்த உடலைப் பார்த்து மனைவியும் உயிரிழப்பு!
மயிலாடுதுறை மாவட்டம், நில்லத்துக்குடி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி மருதாம்பாள். இந்த தம்பதிக்குத் திருமணமாகி 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இவர்களுக்குத் திருமணம் நடந்த நாளிலிருந்து இணை பிரியாமல் ஒன்றாக தங்களது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இவரது இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது கணவன் உடலைப் பார்த்து மனைவி மருதாம்பாள் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தார்.
அப்போது அவர் மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று பரிசோதனை செய்தபோது அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரது உடலுக்கும் இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து தம்பதிகள் உயிரிழந்தது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !