Tamilnadu
காணாமல்போன 2 வயது சிறுவன்.. வீட்டில் இருந்த speaker box-ல் சடலமாக மீட்பு ; விசாரணையில் பகீர்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது 2 வயது மகன் திருமூர்த்தி கடந்த 17ஆம் தேதி வீட்டின் முன்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளார்.
இதுகுறித்து திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் தந்தை புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நான்கு நாட்களாக திருப்பாலப்பந்தல் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் குருமூர்த்தியின் வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸில் ஒன்றில் துர்நாற்றம் வீசி உள்ளது.
இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் வீட்டிலிருந்த ஸ்பீக்கர் பாக்ஸை திறந்து பார்த்தபோது அதில் காணாமல் போன சிறுவன் திருமூர்த்தி சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் சிறுவன் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு போலிஸார் அனுப்பிவைத்தனர்.
பின்னர் போலிஸார் விசாரணையில், ஆசைக்கு அண்ண இணங்க மறுத்தால் அவரை பழிவாங்கும் நோக்கில் குழந்தையைக் கொன்று ஸ்ப்கீக்கர் பாக்ஸில் மறைத்து வைத்தது சித்தப்பா ராஜேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!
-
திமுக தலைவர் வெளியிட்ட வீடியோ.. தாராபுரம் தொகுதி வாக்காளர்களே.. உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்!
-
“த.வெ.க தூய சக்தி அல்ல; துயர சக்தி” : மதுராந்தகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!
-
“சட்டமன்றத்தில் முதலமைச்சர் இன்னும் Dance Fightதான் போடல” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
-
“தோல்விப் பயத்தால் ரூ.10,000 கொடுக்கம் த.வெ.க” : தேர்தல் ஆணையத்தில் என்.ஆர்.இளங்கோ புகார் மனு!