Tamilnadu

கொடநாடு வழக்கு.. ரூ.2000 கோடி பேரம் பேசிய எடப்பாடி பழனிசாமி : தனபால் பரபரப்பு குற்றச்சாட்டு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சாயன், வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி, திபு, சதீஷன், உதயகுமார் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு சம்பந்தமாக தனிப்படை போலிஸார் விசாரித்த போது, சேலத்தை சேர்ந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் இந்த கொலை கொள்ளை சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சேலத்தில் மர்ம வாகன மோதியதில் கனகராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி போலிஸார் கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட கனகராஜ் வாகன விபத்தில் மரணமடைந்தது குறித்து வழக்கு பதிவு செய்து சேலம், சென்னை, கோவை, நீலகிரி போன்ற பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கொடநாடு பங்களாவிலிருந்து எடப்பாடி பழனிசாமி சொல்லிதான் ஆவணங்களை எடுத்து வந்ததாக கார் ஓட்டுநர் கனகராஜ் சொன்னதாக அவரது சகோதர் தனபால் அன்மையில் பேட்டிக் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மீண்டும் சி.பி.சி.ஐ.டி போலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த தனபால், "கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக எந்த தகவலையும் வெளியே சொல்லக்கூடாது என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் கரட்டூர் மணி என்பவர் மூலம் ரூ.2000 கோடிக்கு பேரம் பேசினர்.

மேலும், சேலம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பதவி மற்றும் சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் நிற்க வைத்து, அமைச்சர் பதவி தருவதாகவும் என்னிடம் கூறினர். வரும் 14ம் தேதி சிபிசிஐடி விசாரணையில் ஆஜராவதை தடுப்பதற்காக நான் மனநலம் பாதிக்கப்பட்டவன் என எடப்பாடி பழனிசாமி மற்றும் இளங்கோவன் ஆகியோர் முயற்சிக்கின்றனர்.

Also Read: கொடநாடு வழக்கு.. வசமாக சிக்கிய எடப்பாடி பழனிசாமி: கனகராஜ் சகோதரர் தனபால் பரபரப்பு தகவல்!