Tamilnadu
நிலவில் சந்திரயான்.. பொறியியல் படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கு : மயில்சாமி அண்ணாதுரை சொல்வது என்ன?
கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் , முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, நிலவில் எதுவும் இல்லை என்று முதலில் சொன்னார்கள். நாம் அனுப்பிய சந்திரயான் அங்க நீர் இருப்பதைக் கண்டுபிடித்தது.
கணினி சார்ந்த படிப்புகள் மட்டுமே முக்கியம் இல்லை. பொறியியல் படிப்புகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். காரணம் விண்வெளி துறையில் புரட்சி ஏற்பட்டு வருகிறது.
செல்போன் டவர் இல்லாத வகையில், செயற்கைக் கோள்களால் இயக்கும் அடுத்த தலைமுறை கைப்பேசி வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
நிலவிலிருந்து தனிமங்களை சில டன்கள் எடுத்து வந்தாலே அதை வைத்து பெரிய நாடுகளுக்கு எரிசக்தி கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. ஆனால் அதற்காகசில கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு நிறையத் தொழில் நுட்ப தேவைகள் மற்றும் ஆட்கள் தேவைப்படுவார்கள்.
அதற்கு பொறியியல் படித்தவர்கள் அதிகம் தேவைப்படுவார்கள். இதற்குத்தான் மாணவர்கள் பொறியில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.விண்வெளி படிப்புகள் நிறைய வரவேண்டும் என்பதற்காக முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. சந்திரயான் வெற்றியைச் சர்வதேச நாடுகள் உன்னிப்பாகப் பார்க்கின்றன" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!