Tamilnadu
” தி.மு.க கல்கோட்டை; எந்த மிரட்டலுக்கும் அஞ்சாது” : அண்ணாமலைக்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த வெள்ளி தேருக்குப் பதிலாகப் புதிதாகத் தேரை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "சனாதனமும் இந்து மதமும் வாழைப்பழம் போன்றது. வாழைப்பழம் என்பது இந்து மதம் என்றால் சனாதனம் வாழைப்பழத்தின் மீது உள்ள தோல். தோலை நீக்கி தான் பழத்தைச் சாப்பிட முடியும்.
அதேபோல் சனாதனத்தில் தேவையில்லாத பகுதிகளை எதிர்ப்பது எங்களது கொள்கை. அதை அழிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூறிய கருத்தை பா.ஜ.கவினர் திரித்துப் பேசி வருகின்றனர்.
சனாதனத்தில் உள்ள கோட்பாடுகளைத்தான் நாங்கள் ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறோமே தவிர, சனாதனத்தையே அழிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை மக்கள் மத்தியில் எடுபடாமல் போய்விட்டது. இதை திசை திருப்புவதற்காகவே ஒன்றுக்கும் உதவாத பொய் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர். தி.மு.க மீது எந்த வடிவத்தில் கல்லெறிந்தாலும் தி.மு.க சேதமடையாது. இது கல்கோட்டை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!