Tamilnadu
“கோமாளி கையில் ஆட்சி.. நாடே சர்க்கஸ் கூடாரமாக மாறிவிடும்..” : மோடியை கடுமையாக சாடிய தயாநிதி மாறன் MP!
முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தி.மு.க தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
லீக் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் ஜமால் முஹம்மது கல்லூரி அணி முதலிடமும், தமிழ்நாடு காவல் துறை அணி 2வது இடத்தையும் பிடித்தது. அதேபோல் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு காவல் துறை அணி முதலிடமும், ஜமால் முகமது கல்லூரி அணி 2வது இடத்தையும்,வெற்றிபெற்ற இந்த அணிகளுக்கு வெற்றிக்கான கோப்பையும், பரிசுத்தொகை மற்றும்பாராட்டுச் சான்றிதழ்களை கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தயாநிதிமாறன், எம்.பி., அவசர கதியில் நாடாளுமன்றத்தை கூட்டுகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவே இல்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து பேச மறுக்கிறார். வெளி நாடுகளுக்கு செல்லும் பிரதமர் இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டும் போது எதற்காக அது கூட்டப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும் ஆனால் இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என்கிறார்கள். அதுவும் ஏன் என தெரியவில்லை.
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளார்கள். அந்த குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்த எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இல்லை. அதே போல் தேர்தல் ஆணையத்தை சேர்ந்த அதிகாரிகள் யாரும் இல்லை. முதல் முறையாக பதவியிலிருந்து சென்ற குடியரசு தலைவரை ஒரு குழுவின் தலைவராக நியமித்துள்ளார்கள். அதுவும் ஏன் என தெரியவில்லை.
கோமாளியை ரசிக்கலாம். ஆனால் கோமாளி கையில் ஆட்சியை கொடுத்தால், மன்றமே சர்க்கஸ் கூடாரமாக மாறிவிடும் என்பதற்கு தற்போது நடப்பதே உதாரணம். மோடியின் கூட்டணியில் சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை தான் இருக்கிறார்கள். ஆனால் இந்தியா கூட்டணி மக்கள் கூட்டணி.
நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகிய மூன்றிலும் தோல்வி அடைந்ததால் கஷ்டமாக இருக்கிறது என ஒரே முறை தோல்வி அடைந்து விடலாம் என்பதற்காக தான் ஒரே நாடு, ஒரே தேர்தலை அ.தி.மு.க தற்போது ஆதரிக்கிறது என உதயநிதி தெரிவித்துள்ளார். அதையே நானும் தெரிவிக்கிறேன்.
சி.ஏ.ஜி ஊழல் மிகப்பெரிய ஊழல் அதை மூடி மறைக்க பார்க்கிறார்கள். அதே போல அதானி பிரச்சனை இது போன்ற பிரச்சனைகளை திசை திருப்ப அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நாட்டில் முக்கிய பிரச்சனை இருக்கும் போது மக்களை அதிலிருந்து திசை திருப்பி தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அவர்களின் தவறை மறைப்பது தான் மோடியின் வேலை. 2024 ல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற உடன் நீட்டிற்கு விதி விலக்கை கொண்டு வருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று வாக்குப்பதிவு! : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!