Tamilnadu
”நீட் விலக்கு பெறும் வரை எங்கள் போராட்டம் ஓயாது”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
சென்னை கலைவானர் அரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின், தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ஐந்து நாள் நடைபெறும் மாநில இளைஞர் திருவிழா - 2023 (State Youth Festival - 2023) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாட்டில் உள்ள NCC,NSS மாணவர்களுக்கு மாநில அளவில் இளைஞர் திருவிழா சென்னையில் தொடங்கியுள்ளது. 250க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் புகைப்படக் கண்காட்சி, பேச்சு போட்டிகள் என பல போட்டிகள் நடைபெறுகிறது.
டெல்லியில் குடியரசு தின விழா உள்ளிட்ட அணி வகுப்பில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த NCC, NSS மாணவர்கள் மூன்று நாட்கள் ரயிலில் பயணம் செய்து பங்கேற்க வேண்டியுள்ளது. இனி இவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் போராட்டம் நாடகமாகவே இருக்கட்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். இதற்காக நீங்களும் போராடுங்கள் என்றுதான் அ.தி.மு.கவை அழைக்கிறோம். நீட் விலக்கு அளித்தால் அதற்கான பாராட்டை அ.தி.மு.கவே எடுத்துக்கொள்ளட்டும். இதை அரசியலாகப் பார்க்காமல் இனி நாம் மாணவர்களை இழக்கக் கூடாது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !