Tamilnadu

எதிர்கடை என்பதால் நட்பாக பேசிய இளம்பெண்ணுக்கு திருமண தொல்லை.. 65 வயது முதியவர் அதிரடி கைது !

சென்னை மணலி அன்பழகன் தெருவில் 25 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவரது வீட்டின் அருகே இருக்கும் மளிகை கடை ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் இவருக்கு திருமணம் செய்து கொள்ளுமாறு முதியவர் ஒருவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அதே பகுதியில் அமைந்துள்ள ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் அலாவுதீன் என்பவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். செருப்பு கடை நடத்தி வரும் இவருக்கு வயது 65 ஆகும். அலாவுதீனின் செருப்பு கடையும், அந்த இளம்பெண் பணிபுரியும் மளிகை கடையும் எதிரெதிரே உள்ளதால் இந்த இளம்பெண்ணும், அலாவுதீனும் அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

இந்த இளம்பெண் பேசுவதை தவறாக எண்ணிய முதியவர், அவரை காதலிக்க தொடங்கியுள்ளார். நாளடைவில் அலாவுதீனின் பேச்சு நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு பெரும் அதிர்ச்சியுற்ற அந்த பெண், அவரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் அவர் அந்த இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் கேட்டுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து வற்புறுத்தியும் வந்துள்ளார். இதனால் அந்த இல்பேன் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார். தினமும் சோகத்தில் மன அழுத்தத்தில் இருக்கும் தனது மகளிடம் பெற்றோர் விசாரிக்கையில், நடந்தவற்றை அந்த இளம்பெண் கூறி அழுதுள்ளார்.

இதனை கேட்டதும் அதிர்ச்சியடைந்த தாய், உடனே முதியவர் அலாவுதீனிடம் சண்டையிட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர், அருகில் இருந்த கம்பியால் இளம்பெண்ணின் தாயாரை தக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து சென்ற தாய், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் சுந்தரம் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட முதியவர் அலாவுதீனையும் போலீசார் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இளம் பெண்ணை திருமணத் செய்ய தொல்லை கொடுத்த 65 வயது முதியவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மனைவியின் கை விரலை கடித்து விழுங்கிய கணவர்.. காரணம் என்ன? : அதிர்ச்சி சம்பவம்!