Tamilnadu
சொத்து மதிப்பை மறைத்து தேர்தலில் போட்டியிட்ட வழக்கு: அதிமுக எம்எல்ஏ-க்கு செக் வைத்த ஐகோர்ட்!
சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் அரவிந்தக்க்ஷன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யநாராயணன், சென்னை தி. நகர் தொகுதியில் 2016 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிலையில் 2021 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட போது தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது சொத்து மதிப்பு 2 கோடியே 78 லட்சம் ரூபாய் என கூறியதாக தெரிவித்துள்ளார்.
சட்டத்துக்கு புறம்பாக தனது சொத்து கணக்கை மறைத்து மனைவி மற்றும் மகள் பெயரில் வாங்கிய சொத்துக்களை மறைத்துள்ளதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சத்யநாராயணன் சொத்து மதிப்பை வெளியீடுமாறு கேட்டபோது, அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 13 கோடியே 2 லட்சம் ரூபாய் என தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளார்.
எனவே தனது சொத்து மதிப்பை மறைத்து சத்தியா தேர்தலில் போட்டியிட்டுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். எனவே சொத்து மதிப்பை மறைத்து தேர்தலில் போட்டியிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, புகார் ஆரம்பகட்ட விசாரணை முடித்து,முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரணையை 2 மாதங்களில் முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறை க்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Also Read
-
“கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வந்தது... ஆனால் இந்த ஆண்டு?” - விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!
-
காவிரி விவகாரம்.. முதலமைச்சர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி!
-
“விவசாயிகளுக்காக தஞ்சையில் திரண்ட கழகம்.. கோரிக்கை நிறைவேறாவிட்டால்” : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
‘இதுவே தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால்...?’ : தவெக-வின் அட்டூழியத்தை அடுக்கி கேள்வி எழுப்பிய முரசொலி!
-
“முதல்வர் விஜய்க்கு ஏன் ஈகோ.. அமைச்சர் நிர்மல்குமார் திமுக-வைப் பற்றி பேசினால்”: எச்சரித்த பரந்தாமன்!