Tamilnadu
கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து.. சினிமா பாணியில் குற்றவாளியை துரத்திச் சென்று மடக்கிப்பிடித்த போலிஸார்!
சென்னை நந்தம்பாக்கம், ஏழு கிணறு பூந்தோட்டம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் அனந்த ராமகிருஷ்ணன். இவரது மகள் அஷ்மிதா(18). இவர் அடையாறு பாட்ரிசியன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அஸ்மிதாவை பரங்கிமலை கலைஞர் நகரை சேர்ந்த நவீன் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அஸ்மிதா, நவீன் உடன் பேசுவதை தவிர்த்து இருந்து உள்ளார்.இந்த நிலையில் அஸ்மிதா இன்று வழக்கம்போல் அடையாறில் உள்ள கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது மாணவி அஸ்மிதா பரங்கிமலை ஏழு கிணறு இரண்டாவது தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த நவீன் தன்னிடம் பேசுமாறு கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.
பேச மறுத்து அவனிடம் இருந்து விலகி செல்ல முயன்ற அஸ்மிதாவை திடீரென நவீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து அஸ்மிதாவின் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவி அஸ்மிதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் மயங்கி கீழே விழுந்தார்.இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அஸ்மிதாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த நந்தம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். நவீன் செல்போன் என்னை வைத்து ஆய்வு செய்து பார்த்தபோது நவீன் அதே பகுதியில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.
உடனடியாக காவல்துறையினர் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர் . போலீஸ் தேடுவதை அறிந்து கொண்ட நவீன் போலீசாரை கண்டு தப்பி ஓடினான்.சினிமா பானியில் போலீசார் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.அப்போது நவீன் கீழே விழுந்ததில் மயக்கம் அடைந்தார் உடனே போலீசார் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பட்டப் பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்தபோதே மாணவியை கத்தியால் குத்தி தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!
-
”வாக்கு திருடர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்” : மீண்டும் ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!
-
முகத்தை மறைத்து சென்ற பழனிசாமி: பத்திரிகையாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக.. Chennai Press Club கண்டனம்!
-
வக்பு சட்டத்திருத்தம் : “முழுமையான தடைக்கு அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் அவசியம் ஆகிறது” - முரசொலி!
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!