Tamilnadu
“அண்ணாமலை தான் ஆடு என ஒப்புக்கொள்கிறாரா ?” - திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி !
நேற்றைய முன்தினம் அமைச்சர் துரைமுருகன் டெல்லிக்கு சென்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜல்ஜீவன் திட்ட அமைச்சரையும் சந்திந்து பேசியுள்ளார். ஒன்றிய அமைச்சர் இந்த விவகாரத்தில் ஞாயமான முடிவை எடுப்பார் என நம்புகிறோம். எங்களது உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள கருத்து தவறானது; எடப்பாடி எப்போது உண்மை பேசி இருக்கார்.
நான் ஆடு என்று யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அப்போது ஆட்டுக்குட்டி என்றால் நான் தான் என்பதை அண்ணாமலை ஒப்புக்கொள்கிறாரா..? நான் உதைப்பேன் என்று யாரையும் சொல்லவில்லை, அண்ணாமலை கை அரிவாள் பிடித்த கை என்றால், எங்கள் கை பேனா பிடித்த கை; எங்களுக்கு எழுத மட்டுமே தெரியும்.
நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் நடந்துள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் தான் வழக்கு தொடர்ந்தேன். அதன் பின் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தோம். தற்போது எடப்பாடி விருப்பப்படி தமிழ்நாடு காவல்துறையே இந்த வழக்கை விசாரிக்கட்டும் என்று கூறினேன். எடப்பாடி மேல் உள்ள வழக்கை நான் வாபஸ் வாங்கவில்லை.
பட்டவர்தமாக பச்சை பொய் சொல்லி மாட்டிக்கொண்டுள்ளார் ஆளுநர். ராஜ்பவனில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கையொப்பமிட்ட ஒப்புகைச்சீட்டே அதை வெளிப்படுத்தியுள்ளது. இதிலிருந்து தப்பித்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆளுநர் டெல்லி சென்றுள்ளாரா? அல்லது டெல்லி தலைமை அவரை கண்டிப்பதற்காக வரச்சொல்லி இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை.
தமிழ்நாடு ஆளுநர், அவருக்கான முற்றுப்புள்ளியை அவரே வைத்துக் கொள்வார் என நினைக்கிறேன். அவர் டெல்லியிலிருந்து ஆளுநராகவே வருவாரா? அல்லது வெறுமனே வருவாரா? என்பது வந்த பிறகு தான் தெரியும்." என்றார்.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!