Tamilnadu
கையெழுத்திடாமல் டிமிக்கி.. பாஜக மாநில செயலாளர் SG சூர்யாவின் 2 மனுக்களும் தள்ளுபடி.. நீதிமன்றம் அதிரடி!
நாடு முழுவதும் பாஜகவினர் போலி பிரச்சாரங்களையும், அவதூறுகளையும் தான் ஆரம்பத்தில் இருந்தே பரப்பி வருகிறது. தமிழ்நாட்டிலும் அது விதிவிலக்கில்லாமல் அரங்கேறி வரும் நிலையில், பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே மேலும் பொய், அவதூறு என்பது அதிகமாகிவிட்டது.
அதிலும் பாஜக மாநில செயலாளராக இருக்கும் எஸ்.ஜி.சூரியா சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து அடிக்கடி காட்டமான விமர்சனங்களை பதிவேற்றுவது வழக்கம். அதோடு ஆதாரம் இல்லாத குற்றசாட்டுகளை வைப்பதற்கு இவருக்கு நிகர் இவரே என்றும் சொல்லலாம்.
இப்படி பல்வேறு சிக்கலில் சிக்கிய இவர், அண்மையில் மதுரை எம்.பி., சு.வெங்கடேசனை அவதூறு கருத்துகளை பதிவேற்றி மேலும் ஒரு சிக்கலில் சிக்கினார். அவதூறு கருத்துகளை வெளியிட்டதால் விளைவாக இவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து எஸ்.ஜி.சூர்யாவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரடியாக கைது செய்தனர்.
இதையடுத்து எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. பின்னர் அவரை மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இதைத்தொடர்ந்து எஸ்.ஜி.சூர்யா ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு நிபந்தனை வழங்கியது. அதன்படி மதுரை காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்று அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 12 நாட்களாக சூர்யா காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கையெழுத்திடாமல் தலைமறைவாகியிருந்தார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கையெழுத்து இட வர முடியவில்லை என சைபர் கிரைம் காவல்நிலையத்தில் பாஜக நிர்வாகி சூர்யா சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதனிடையே சிதம்பரம் கோவில் தீட்சிதர் விவகாரம் தொடர்பாக தவறான கருத்தை பதிவிட்டதாக கூறி கடலூர் மாவட்ட சிதம்பரம் டவுண் காவல்துறையினர் மேலும் ஒரு அவதூறு வழக்குப்பதிவு செய்து சூர்யாவிற்கு சம்மன் அளித்த நிலையில் மதுரைக்கு கைது செய்வதற்காக வருகை தந்தனர்.
அந்த சமயத்தில் SG சூர்யாவின் ஜாமினில் நிபந்தனையை தளர்த்த கோரியும், சென்னைக்கு நிபந்தனை கையெழுத்து இட மாற்றம் செய்ய கோரியும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சூர்யா சார்பில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி சூர்யா தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமின் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது, அதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம், பாஜக நிர்வாகி சூர்யா நிபந்தனை ஜாமினில் 30 நாட்கள் மதுரை சைபர் கிரைம் காவல்நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமினில் தளர்வு கோரியும், சென்னையில் தங்கியிருந்து கையெழுத்து இட அனுமதி அளிக்க கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனிடையே தொடர்ந்து மதுரையின் பல்வேறு இடங்களில் எஸ்.ஜி.சூர்யாவை சிதம்பரம் டவுண் காவல்துறையினர் தேடி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !
-
சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘ஜெய்சங்கர்’ பெயரில் சாலை! : தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு!
-
கல்வித்தகுதியை பொது வெளியில் சொல்ல பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம்? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
-
தேசிய நலனுக்கு மாறாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டும் விளையாடலாமா? : காங்கிரஸ் கேள்வி!