Tamilnadu
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையின் கை, கால்களை கட்டிப்போட்டு சித்தரவதை.. பா.ஜ.க பெண் நிர்வாகி கைது!
சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சரண்யா. இவரது 7 வயது மகன் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் வில்லிவாக்கம் சிட்கோ நகர்ப் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் தனது மகனைச் சேர்த்துள்ளார். கடந்த 7 மாதங்களாகச் சிறுவன் பள்ளிக்குச் சென்று வருகிறார்.
இந்நிலையில் இந்த பள்ளிக்குக் கல்லூரி மாணவர்கள் இன்டர்ன்ஷிப் வந்துள்ளனர். அப்போது பள்ளியின் உரிமையாளர் மீனாட்சி என்பவர் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சரண்யாவின் குழந்தையின் கை, கால்களைக் கட்டிப்போட்டு சித்தரவை செய்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இது குறித்து குழந்தையின் பெற்றோர் சரண்யாவிடம் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி மீனாட்சியிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் "நான் அப்படிதான் செய்வேன் உன்னால் என்ன செய்ய முடியும்" என மிரட்டியுள்ளார்.
பின்னர் இதுபற்றி சரண்யா வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து தனியார் பள்ளியின் உரிமையாளர் மீனாட்சியை போலிஸார் கைது செய்தனர். இவர் பா.ஜ.க மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!