Tamilnadu
பணியில் இருந்த காவலர்களிடம் அத்துமீறல்.. பாஜகவை சேர்ந்த 2 பேர் கைது.. தஞ்சை போலிசார் அதிரடி !
தஞ்சாவூர் மாவட்டம் மேல அலங்கம் சிங்கபெருமாள் குளத்தில் மேற்கு போலீசார் நேற்றைய முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கார் ஒன்று அந்த சாலையில் தாறுமாறாக ஓடியது. நிற்காமல் சென்ற அந்த காரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் விரட்டி சீனிவாசபுரம் அருகே காரை மடக்கி நிறுத்தினர். அப்போது காரை ஓட்டி சென்றவர்களில் இரண்டு பெரும் குடிபோதையில் இருந்தது தெரியவந்த்து.
இதையடுத்து அவர்கள் இரண்டு பெரும் தடுத்து நிறுத்திய போலீசாரிடம் அத்துமீறி நடந்துகொண்டனர். மேலும் நாங்கள் யார் என்று தெரியுமா? எங்க பவர் என்ன என்று தெரியுமா? என்று சரமாரியாக பேசியுள்ளனர். தொடர்ந்து காவலர்களை ஆபாசமாக, மோசமாக பேசியுள்ளனர். அதோடு காவலர்களை யூனிபாஃர்மை கழட்டி விட்டு வெளியே வந்தால் உயிர் இருக்காது என்று கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
பின்னர் அவர்கள் இருவரும் காரில் புறப்பட்டு சென்றனர். நடந்த இந்த சம்பவத்தை ஆயுதப்படை காவலர் காட்டுராஜா மற்றொரு காவலருடன் சேர்ந்து வீடியோ எடுத்தார். இதைதொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவலர் அளித்த புகாரின்பேரில் தஞ்சை மேற்கு போலீசார், அந்த இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
அப்போது அவர்கள் ஹரிபாபு மற்றும் காரல்மார்க்ஸ் என்றும், இருவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்றும், தஞ்சை புது பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநில பாஜக துணை பொதுசெயலாளரான கருப்பு முருகானந்தம் வீட்டில் பதுங்கி இருப்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து ஹரிபாபு மற்றும் காரல்மார்க்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!