தமிழ்நாடு

27 ஆண்டுகளுக்கு பின்.. 2k கிட்ஸ்கள் அதிர்ஷ்டசாலிகள் : இணையத்தில் வைரலாகும் தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட்!

சென்னையில் இன்னும் 3 நாட்கள் மழை தொடரும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

27 ஆண்டுகளுக்கு பின்..
2k கிட்ஸ்கள் அதிர்ஷ்டசாலிகள் : இணையத்தில் வைரலாகும் தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முழுவதும் கத்திரி வெயில் முடிந்தும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இரவு நேரங்களில் கூட தூக்கம் இல்லாமல் வெப்பத்தால் வேதனையடைந்தனர்.

இந்நிலையில் ஜூன் 18ம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் பேடி நேற்று காலையிலிருந்தே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.

இதன் காரணமாகச் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழ்நாட்டில் மிதமான மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தற்போது மழை பெய்து தமிழ்நாட்டில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியடைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் மழையை ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் நகைச்சுவையுடன் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

27 ஆண்டுகளுக்கு பின்..
2k கிட்ஸ்கள் அதிர்ஷ்டசாலிகள் : இணையத்தில் வைரலாகும் தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட்!

அதில், சென்னையில் 27 ஆண்டுகளுக்குப் பின் மழை காரணமாக ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2k கிட்ஸ் மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள். முதலில் கடும் வெப்பத்தால் ஜூன் மாதத்தில் விடுமுறை. தற்போது மழையால் விடுமுறை.

1996ம் ஆண்டு வரலாறு காணாத மழை பெய்தது. 150 மி.மீ வரை மழை கொட்டித் தீர்த்தது. அதன் பிறகு 2023ம் ஆண்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100 00 மி.மீ அளவை தாண்டி மழை பெய்துள்ளது. இன்றும் மூன்று நாட்கள் மழை தொடரும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories